Book Name | 40 Hadees Qudsigal |
Author | M.H. Jawahirullah |
Catagory | Hadees |
Publisher | Putholi Padhippagam |
Language | Tamil |
Edition | 3rd Edition |
Binding | Soft Cover |
Number of Pages | 64 Pages |
ஹதீஸை அறிஞர்கள் ஹதீஸ் அந்நபவி மற்றும் ஹதீஸ் அல் குத்ஸீ என இரு வகையாக வகுத்துக் கூறுவர். நபி ஸல் அவர்கள் சொன்னதாக அல்லது செய்ததாக நபித் தோழர்கள் அறிவிக்கக் கூடிய செய்திகள் ஹதீஸ் அந்நபவி எனப்படும். அல்லாஹ் கூறுவதாக நபி ஸல் அவர்கள் அறிவிக்கக் கூடிய செய்திகள் ஹதீஸ் குத்ஸீ எனப்படும்.
அல்லாஹ்வுடன் இணைத்துக் கூறப்படுவதாலேயே இவை ஹதீஸ் குத்ஸீ பரிசுத்த ஹதீஸ்கள் என்று கூறப்படுகின்றன. உங்கள் கையில் தவழும் இந்நூலில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஹதீஸ் குத்ஸீகளை உள்ளடக்கியுள்ளது. ஹதீஸ்கள் பற்றி அறிய ஆவல் கொண்டவர்களுக்கு இது ஒரு அற்புதத் தொகுப்பாகும் என்பதில் ஐயமில்லை.
இந்நூலினை பேராசிரியர் முனைவர் M.H. ஜவாஹிருல்லாஹ் அவர்கள் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு சிறப்பாக தமிழ்ப்படுத்தியுள்ளார்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சமூகப் பணிகள் சட்டமன்ற உறுப்பினர் என்ற அரசியல் பொறுப்பு, சமூக நிகழ்வுகள் என்ற பொறுப்பான பல பணிகளுக்கும் மத்தியில் பேனா முனைப் போராட்டத்திற்கு அவர் நேரம் ஒதுக்கியிருப்பது பாராட்டத்தக்கம் மட்டுமல்ல பயன்தரத்தக்கதும் கூட.
– மவ்லவி எம்.எல். முபாரக் மதனி,
Reviews
There are no reviews yet.