ஆழ்கடல் ஆராய்ச்சியும் விண்வெளிப் பயணமும் அறிவுப்புரட்சியின் அடையாளமாக மனிதன் கொண்டாடிக் கொண்டிருக்கிறான். அறிவின் மூலம் வானத்தில் பறப்பதற்கும், நீரில் நீந்துவதற்குமான ஆற்றலை வளர்த்துக் கொண்டான் மனிதன்!
ஆனால், இந்த அறிவைக் கொண்டு இறைவனை பற்றியும், நாம் ஏன் படைக்கப்பட்டோம்? மரணத்திற்குப் பிறகு என்ன ஆகப் போகிறோம்? என சிந்திக்காமல் இருக்கின்றான்.
இத்தகைய சிந்தனையின் பக்கம் வழிகாட்டுவதுதான் இந்நூலின் நோக்கம் ஆகும்.
இஸ்லாம் குறித்து முஸ்லிம் அல்லாத மக்களுக்கு அறிமுகம் செய்ய விரும்பும் முஸ்லிம்கள், உங்கள் நண்பர்களுக்கு இந்த நூலை பரவலாக்குங்கள்.
– பஷீர் ஃபிர்தவ்ஸி
இஸ்லாமிய அறிஞர், அழைபபாளர்)
இஸ்லாம்-ன் உண்மைப் போதனைகளை உலகறியச் செய்ய வேண்டும். அது நம்மீது கடமை என உணர்ந்த பலரும் அதனை மக்களுக்கு அறிமுகம் செய்யும் முயற்சியில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் இந்தச் சிறிய புத்தகம் இஸ்லாமை அறிய வேண்டும் என்ற ஆர்வமுள்ள அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.
– S.கமாலுத்தீன் ஜமாலி மதனி
(இஸ்லாமிய மூதறிஞர், முன்னோடி அழைப்பாளர்)
Riswin Sulthan –
இது தாவாவிற்கான புத்தகம் மட்டுமல்ல. ஒவ்வொரு தாயியும் வாசிக்க வேண்டிய புத்தகம். எடுத்துரைத்தலையும், வாதிப்பதையும் கற்றுத்தருக்கிறது.
எப்படி இவ்வளவு விரிவான தகவல்களை மிகச்சுருக்கமாக அமைத்திருக்கிறார் என்று ஆச்சரியமாகவுள்ளது.
நாத்திகம், பலதெய்வக்கொள்கை, கிறிஸ்தவம் என அனைத்து தவறான கொள்கைகளையும் குர்ஆன் சுன்னாவிலிருந்து எதிர்கொள்வது நூலின் சிறப்பு.
புத்தகத்தில் இது இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்க எதுவுமே இல்லை. இஸ்லாத்தை ஏற்கும் முறை இல்லை என்பது தான் குறை என்று கடைசி பக்கம் புரட்டினேன். ஆசிரியர் அதையும் விட்டுவைக்கவில்லை.. என்னை புன்னகைக்க செய்துவிட்டார்!!..
இவர் எழுத்துபணியை தொடர என்னுடைய வேண்டுகோளும் பிரார்த்தனைகளும்..
– ரிஸ்வின் இப்னு சுல்த்தான்