Product Information
தங்களது தவறான கருத்துகளில் இரகசியமாகச் செயல்பட்டு வந்த இக்வானி, குத்பி, ஸுரூரி மற்றும் ஜிஹாதி ஆதரவாளர்களை 1990க்குப் பிறகு நடைபெற்ற வளைகுடாப் போர் வெளிக்கொண்டு
வந்தது. அவர்கள் தங்களது தவறான வழிமுறைகள் மற்றும் சித்தாந்தங்களுக்காக குரல் கொடுத்தபோது, அறியாமையில் இருந்த பலர் அவர்களது வழிகேட்டில் விழுந்தார்கள். அவர்கள் தங்களை
ஸலஃபிகள் என்று நினைத்தார்கள். மேலும், ஸலஃபி மன்ஹஜ் மற்றும் அகீதாவின்மீது இருப்பதாகவும் எண்ணினார்கள். ஆனால், உண்மையில் அவர்கள் கவாரிஜ்களின் மன்ஹஜில் இருந்தார்கள். இவர்களில் சிலர் சஊதி அரேபியாவிற்குள் இருந்து தோன்றியதால், இது வரலாற்று ரீதியாக ஸலஃபி அடையாளத்துடன் பரவியது. பலர்
இந்தச் சீரழிவுக்காரர்களால் ஏமாற்றப்பட்டு அவர்களின் சித்தாந்தங்களால் விஷம் அடைந்தனர். இந்த விஷம் வளைகுடாப்
போருக்குப் பிந்தைய ஆண்டுகளில், அஹ்லுஸ் ஸுன்னா ஸலஃபிகளுக்கு மத்தியில் நேரடிக் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சையிது குத்பின் சகோதரர் முஹம்மது குத்பும் முஹம்மது ஸுரூர் மற்றும் பலரும் ஸுன்னாவின் விவகாரங்கள், ஸலஃப்களின் வழிமுறைகளில் குழப்பத்தை ஏற்படுத்தினார்கள். அவர்களது கருத்துகள் குத்பு, பன்னா மற்றும் மவ்தூதியின் சித்தாந்தங்களாக இருந்தன. அவை இரண்டு வகையான திரிபுகளாகத் திரண்டு
நின்றன. ஒன்று, குத்பிஸத் திரிபு. இது தக்ஃபீர், புரட்சிகள், ஆட்சியாளர்களையும் அரசாங்கங்களையும் எதிர்த்துக் கிளர்ச்சி செய்தல், கிலாஃபத் உருவாக்க இரகசியத் திட்டங்கள், ஜிஹாதி பிரச்சாரம், உணர்ச்சிகளைத் தூண்டிவிடுதல் ஆகிய தன்மைகளோடு இயங்கியது. இன்னொன்று, பன்னாயிஸத் திரிபு. இது கூட்டுப் பணி, ஜனநாயகச் செயல்பாடு, அரசியல் ஈடுபாடு, வெகுஜன இயக்கங்கள், முஸ்லிம் ஒற்றுமை என்ற பெயரில் பித்அத்வாதிகளுடன் சமரசம் செய்தல், அவர்களை விமர்சிப்பதை பிரிவினை வாதம் என மடை மாற்றுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது
ReviewsThere are no reviews yet.