Book |
Mishkathul Masabeeh Part 1 |
Publication | Rahmath Padippagam |
Author | Imam Khatib at–Tabrizi |
ISBN-13 | – |
Language | Arabic – Tamil |
Edition | 1 |
Binding | Hard cover |
Number of Pages | 500+ Pages |
மிஷ்காத்துல் மஸாபீஹ் நூல் அறிமுகம்:
எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகுக. அருளும் அமைதியும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் அவர்களின் மீதும் அவர்களைப் பின்பற்றி வாழ்ந்த சத்தியத் தோழர்களின் மீதும் நம் அனைவரின் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக.
‘மிஷ்காத்துல் மஸாபீஹ்’ எனும் இந்த நூல் இமாம் அபூ அப்தில்லாஹ் முஹம்மத் பின் அப்தில்லாஹ் அல்கதீப் அல்உமர் அத்திப்ரீஸீ அவர்கள் தொகுத்த சிறந்த ஹதீஸ் நூல் ஆகும். இமாம் பஃகவீ அவர்களின் ‘மஸாபீஹுஸ் ஸுன்னாஹ்’ நூலின் அடிப்படையில் அதிலுள்ள அட்டவணைப்படி அமைத்து அதிகமான ஹதீஸ்களை இணைத்து அருமையான தொகுப்பாக இந்தச் சமுதாயத்துக்கு சமர்ப்பித்துள்ளார்கள்.
இதனை ரஹ்மத் பதிப்பகம் சார்பில் தமிழாக்கம் செய்து தருவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.பேருவகை அடைகின்றோம். நபிகளாரின் வாழ்வியல் போதனைகள்தான் நமக்குச் சிறந்த முன்மாதிரி எனும்போது அவர்களின் பொன்மொழிகளையும் வழிமுறைகளையும் நாம் பேசும் மொழிகளில் அறிந்தால்தானே அதனைப் பின்பற்றி நடக்கமுடியும்? தமிழ் கூறும் நல்லுலகிற்கு அதனைச் சமர்ப்பிப்பதை விட நற்பேறு எதுவாக இருக்கமுடியும்?
இமாம் அல்பஃகவீ அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு:
இவரது இயற்பெயர் அபூமுஹம்மத் அல்ஹுஸைன் பின் மஸ்வூத் அல்ஃபர்ராஉ அல்பஃகவீ என்பதாகும். ‘முஹ்யுஸ்ஸுன்னாஹ்’ ‘நபிவழியை உயிர்ப்பிப்பவர்’ என்று போற்றப்படும் அளவுக்குக் கல்விப்பணியில் உயர்ந்து நிற்கிறார். குர்ஆன் விரிவுரையாளர், ஹதீஸ் துறை அறிஞர், மார்க்கச் சட்ட நிபுணர் ஆகிய பன்முகத் திறமைகள் கொண்ட இமாம் ஆவார்
Reviews
There are no reviews yet.