Book Name | Naraga Viduthaliku Vazhi |
Author | M.A. Abdul Hameed |
Publisher | Sajitha Book Center |
Catagory | Common Book |
Language | Tamil |
Edition | 1st |
Binding | Paperback |
Number of Pages | 48 Pages |
நூல் அறிமுகம்:
மனிதன் இம்மையில் மறுமை வாழ்வை நோக்கியவனாக வாழ வேண்டும். இம்மையுடன் வாழ்வு முடிவதில்லை. முடிவில்லா வாழ்வும் அவனுக்கில்லை என்பதை உணர வேண்டும்.
மரணமும் வரும். மறுமையும் வரும். மறுமை நாளில் இறைவன் முன் நிறுத்தி வைக்கப்பட்டு, கேள்வி கணை களால் துளைத்து எடுக்கப்படுவான். அப்போது இவனிடம் இவ்வுலகில் ஏற்பட்ட தவறுகளுக்கும் அவன் பதில் கூறத் தான் வேண்டும்.
மனிதன் தன்னையும் அறியாமல் சில தவறுகளை செய்கிறான். சில தவறுகளோ அவனிடம் அறிந்தே ஏற்படுகிறது. இப்படி செய்யும் தவறுகள் அவனிடம் அடுத்தடுத்து ஏற்படுவது தான் ஆச்சரியமாகும்.
இப்படி தவறுகள் நிகழ்வது மனிதனிடம் இயற்கையான ஒன்றுதான் ஆனால், அது தொடர்வது பெரும் பலவீனம் தானே! இந்த பலவீன நிலையிலிருந்து விலக வேண்டியப் பொறுப்பைக் கூட மனிதன் உணர்ந்தவனாக தெரியவில்லை.
பல தெய்வக் கொள்கையாளர்கள் அல்லது கடவுள் இல்லை, என்று கூறுவோர், எப்படியும் வாழலாம், அது அவர்களுக்கு சரியாக இருக்கலாம். அவர்களுக்கு மறுமைப் பற்றியும், தவறுகளுக்கேற்பத் தண்டனை உண்டு என்பது பற்றியும் அவர்கள் அறியாதிருக்கலாம்.
ஆனால், மறுமை நிகழ்வுகள், அதை தொடர்ந்து, சொர்க்கம், நரகம் என்ற வாழ்க்கை உண்டு என்பதைப் புரிந்த முஸ்லிம்கள் இதில் கவனக் குறைவாக உள்ளது தான் பரிதாபமாகும்.
தவறு எனத் தெரிந்தாலும் தொடர்ந்து செய்யும் பழக்கத்தில் புகைப்பிடித்தலைக் கூறலாம், இதன் இறுதி முடிவு நரகம் தான். தற்கொலை கூடாது என்பதைப் புரிந்தவர்கள் கூட தற்கொலைக்கு சமமான புகைத்தலை தவிர்ப்பதே இல்லை.
இதுபோல், மதுவும், விபச்சாரமும் கூட இன்றைய இஸ்லாமிய இளைஞர்களிடையே சர்வ சாதாரணமாகி விட்டது. இதன் முடிவும் நரகம் என்பதை அவர்கள் ஏனோ உணரவில்லை.
ஏழைகளிடம் யாசகம் கேட்கும் பழக்கம் உள்ளது என்றால், பணக்காரர்களிடம் பேராசை அதிகமாக உள்ளது. இந்த இரண்டு குணமும் இரண்டு தரப்பின ரையுமே நரகில் கொண்டு போய்தான் சேர்க்கும்.
இதுபோல் பெண்களிடம் மிகப் பெரும் மோசமான பழக்கம் காலில் விழுவது தான். இது ஆண்களிடம் உண்டு என்றாலும் பெண்களிடம் சற்று அதிகம் எனலாம். இதன் இறுதி முடிவும் நரகம் தான்.
எனவே நரகிலிருந்து விடுதலைப் பெற தவிர்க்க வேண்டிய சிலவற்றை மட்டும் இங்கே தொகுத்து உள்ளேன்.
இந்நூல் எழுதியபின் சரிபார்த்து தந்த மவ்லனி K.M. முஹம்மது மைதீன் உலவி அவர்களுக்கும், வெளியீடு செய்த M.A. முஹம்மது ஜக்கரிய்யா (ஸாஜிதா புக் சென்டர்) அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவண்,
-M.A. அப்துல் ஹமீது, பாமணி.
Reviews
There are no reviews yet.