Product Information
தஜ்வீத் குர்ஆன் & சொல்லுக்கு சொல் தமிழாக்கம் என்பது குர்ஆனைத் தெளிவாகவும் சரியாகவும் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் சிறந்த வழிகாட்டியாகும். பல ஆண்டுகளாக இருந்த ஆசையை அல்லாஹ் நிறைவேற்றிய விதமாக, இந்நூல் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கான அபூர்வமான அருளாகும்.
இந்த Tajweed Quran in Tamil இன் சிறப்பம்சங்கள்:
-
தஜ்வீத் விதிகள் நிற அடையாளங்களுடன்: குர்ஆன் வாசிப்பில் தவறுகள் வராமல், சரியான மக்காரஜ் மற்றும் உச்சரிப்பை பின்பற்றுவதற்காக ஒவ்வொரு தஜ்வீத் சட்டமும் தனித்தனி நிறங்களில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
-
சொல்லுக்கு சொல் தமிழாக்கம்: ஒவ்வொரு அரபு சொல்லின் கீழும் அதன் தமிழ் பொருள் குறிப்பிடப்பட்டிருப்பதால், குர்ஆன் அர்த்தத்தை எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.
-
உயர்தர அச்சு & காகிதம்: இறக்குமதி செய்யப்பட்ட உயர்தர எல்லோ கலர் காகிதத்தில் அழகாக அச்சிடப்பட்டிருப்பதால், படிக்க சுலபமாகவும் நீடித்தும் இருக்கும்.
-
மதீனா குர்ஆன் அரபு எழுத்து: உலகளவில் பயன்படுத்தப்படும் மதீனா முஷ்ஹஃப் அரபு எழுத்து வடிவம் கொண்டிருப்பதால், சரியான குர்ஆன் வாசிப்பு அனுபவம் கிடைக்கும்.
-
தெளிவான தமிழ் எழுத்துக்கள்: தமிழ் மொழிபெயர்ப்பு தெளிவாகவும் படிக்க எளிதாகவும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த தஜ்வீத் குர்ஆன் & சொல்லுக்கு சொல் தமிழாக்கம் புத்தகம் குர்ஆனை கற்றுக்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கும், குர்ஆனை அர்த்தமுடனும் தஜ்வீத் விதிகளுடன் படிக்க விரும்பும் பெரியவர்களுக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். குடும்பத்திற்காகவோ, மத்ரஸா மாணவர்களுக்காகவோ, தனிப்பட்ட கற்றலுக்காகவோ இந்நூல் ஒரு மதிப்புமிக்க முதலீடு.
Tajweed Quran & Sollukku Sol Tamizhakkam | Maqdis Quran
Smufts
(verified owner) –
alhamdulillah , received the best word by word transition quran may Allah bless us all ✨️
Arshad Aabirah
–
assalaamu alaikkum ….. very nice and learning quran knowledge in best way