Book Name | varachonnaarkal vanthaarkal vendraarkal |
Author | |
Catagory | |
Publisher | Ilakkiya Cholai |
Language | Tamil |
Edition | |
Binding | Soft |
Number of Pages | Pages |
இந்தியாவில் ஆட்சி செய்த முஸ்லிம் மன்னர்களை நாகரிகம் தெரியாதவர்களாகவும் கொடுங்கோலர்களாகவும் சித்தரிக்கும் முயற்சி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ‘கோயில்களை இடித்தார்கள், கோயில் சொத்துகளை கொள்ளையடித்தார்கள், இந்துக்களை கொத்துக் கொத்தாக கொலை செய்தார்கள்’ என்று ஆதாரம் இல்லாத செய்திகள் இன்று வரலாறுகளாக திணிக்கப்படுகின்றன. இவற்றை அடிப்படையாக வைத்து திரைப்படங்களும் எடுக்கப்படுகின்றன.
இதனை மையப்படுத்தி பிரபல எழுத்தாளர்களின் நூல்களும் வந்துள்ளன. மதன் எழுதிய ‘வந்தார்கள் வென்றார்கள்’ அதில் முக்கியமானது.
ஆனால், முஸ்லிம் மன்னர்களை வரவழைத்தது யார் என்ற உண்மையை மதன் தனது புத்தகத்தில் சொல்லவில்லை. மதன் சொல்ல மறந்த அல்லது மறைத்த செய்திகளை வரலாற்று ஆதாரங்களுடன் அழகாக இப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளார் வரலாற்றாய்வாளர் செ. திவான்.
Reviews
There are no reviews yet.