Arabic Title | الْحَثُّ عَلَى طَلَبِ الْعِلْمِ وَبَيَانُ فَضْلِ الْعُلَمَاءِ |
Tamil Title | இஸ்லாமிய அறிவைத் தேட ஆர்வப்படு! அறிஞர்கள் சிறப்பை அறி! |
Title | Islaamiya Arivai Theada Aaarvappadu! Aringargal Sirappai Ari! |
Author | ஷெய்க் ஸாலிஹ் இப்னு ஃபவ்ஸான் ஆலு ஃபவ்ஸான் |
Translator | அபூ அர்ஷத் |
Edition | 1st, 2022 |
Category | Basic Education, Advices |
Pages | 64 |
Size | 14 cm x 21.5 cm |
Language | Tamil |
Binding | Soft |
Publisher | Kugaivaasigal |
இஸ்லாமியக் கல்வி ஆர்வம் என்பது இஸ்லாமிய அறிஞர்களின் சிறப்பை அறிவதிலிருந்து தூண்டப்படுகிறது. எப்படியெனில், அவர்கள் இஸ்லாமியக் கல்வியைப் பரப்புரை செய்து இஸ்லாமின்மீது ஆர்வத்தைக் கிளறுகிறார்கள். அதனால் இஸ்லாம் நமது இதயங்களின் பெரும் பரப்பைக் கவர்ந்துவிட, பின்னர் நாம் அறிஞர்களின் வழிகாட்டலில் நடைபோட விரும்புவோம். வாழ்வில் வழிதவறாத பாதுகாப்பு அம்சம் இந்தப் பந்தத்தில் இருக்கின்றது. நபித்தோழர்கள் நமது நபியின் சிறப்பை அறிந்து நபியின் மாணவர்களாக ஆனார்கள். அதற்கடுத்து நபித்தோழர்களின் சிறப்பை அறிந்து அவர்களின் மாணவர்களானார்கள் தாபிஊன். இதற்கடுத்து இவர்களின் சிறப்பறிந்து இவர்களுக்கு மாணவர்களானார்கள் தபஉ தாபிஈன். இப்படியே சங்கிலித் தொடரான பந்தத்தின் மூலம் நல்ல அறிஞர்களுடைய கல்வி ஓர் உம்மத்தைச் சீர்திருத்தி உருவாக்குகிறது. இதன் தேவையும் ஆர்வமும் மறுமை வரை தொடரும். ஷெய்க் ஸாலிஹ் அல்ஃபவ்ஸான் இந்நூலை இந்தக் கருப்பொருளுடன் வழங்கி நம்மை இஸ்லாமியக் கல்விச் சிறகுகளுடன் பறந்திட வழிகாட்டுகிறார்கள்.
Riswin k –
இமாம். ஷெய்க். ஸாலிஹ் அல் ஃபவ்ஸான் (ஹஃபிதஹுல்லாஹ்) அவர்களின் இந்த புத்தகத்தில் கல்வி குறித்தும் அதன் வகைகள் குறித்தும், இன்னும் ஒவ்வொன்றுக்கும் குர்ஆன் ஹதீஸ்களுக்கு மிக அழகான விளக்கங்களை கூறியிருப்பது அனைத்தும் நம் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாகும்.. மிக இலகுவான தமிழில் மொழிபெயர்த்திருக்கும் ஆசிரியருக்கு அல்லாஹ் அருள்புரிவானாக!! கட்டாயம் வாங்கிப்படியுங்கள்..