Product Information
நபியின் வாழ்க்கை நிகழ்வுகளை காலவரிசையில் எடுத்துச்சொல்லும் நூல்கள்தாம் அதிகம். சீறாவை பகுப்பாய்வுரீதியில் எடுத்துரைத்து, அதிலிருந்து பாடங்களையும் படிப்பினைகளையும் பெற்றுக்கொள்ள உதவும் நோக்கில் எழுதப்பட்டுள்ள நூல்கள் குறைவு.
நம் வாழ்வின் இருளடைந்த பக்கங்களுக்கு ஒளியூட்டவும், நம் உள்ளங்களுக்கும் அறிவுக்கும் நடைமுறைகளுக்கும் வழிகாட்டவும் தக்க ரீதியில் நபிவரலாற்றை அணுகி, அதிலிருந்து மதிப்புமிக்க பாடங்களையும் வழிகாட்டல்களையும் எடுத்துக்காட்டும் முன்னோடியான நூல் இது. எதிரிகளை எப்படி பொறுமையுடன் எதிர்கொள்வது, அரும் தியாகங்கள் புரிந்தேனும் இஸ்லாமியத் தூதினை எப்படி செம்மையாக எடுத்துரைப்பது, அடிப்படைகளில் எந்தவொரு சமரசமும் செய்துகொள்ளாது இறைப்பாதையில் எப்படி முன்னேறுவது என்பதையெல்லாம் நபிவரலாற்றிலிருந்து நமக்குக் கற்பிக்கும் அரிய நூல்.
முஸ்லிம் சமூகம் அதன் தூய்மையையும், சீர்மையையும், உயர்வையும் மீளப்பெற்று உலகச் சமூகங்களுக்கு தலைமைத்துவம் வழங்கக்கூடிய முதன்மைச் சமூகமாக மாற்றமடைவதற்கு ஏந்த வேண்டிய வழிகாட்டும் ஒளிவிளக்கு
ReviewsThere are no reviews yet.