Product Information
Tamil Title | துல்ஹஜ்ஜு முஹர்ரம் ஆஷூறா – சிறப்புகளும் வழிபாடுகளும் |
Title | Dhul Hajj Muharram Aashoora – Sirappugalum Vazhipaadugalum |
Author | உஸ்தாத் அபூ நசீபா எம்.எஃப். அலீ |
Edition | 1st, 2022 |
Category | Worship, Fiqh |
Pages | 88 |
Size | 14 cm x 21.5 cm |
Language | Tamil |
Binding | Soft |
Publisher | Kugaivaasigal |
துல் ஹஜ்ஜும் முஹர்ரமும் அடுத்தடுத்து வருகின்ற மாதங்கள். துல் ஹஜ்ஜின் முதல் பத்து நாள்கள் மட்டுமின்றி அடுத்து வருகின்ற அய்யாமுத் தஷ்ரீக் எனப்படும் மூன்று நாட்களும் வழிபாடுகள் கொண்டவை. அல்லாஹ்வின் இல்லம் கஅபாவை ஹஜ்ஜு செய்தல், இது முடியாதவர்கள் அரஃபா நோன்பிருத்தல், பெருநாள் சிறப்புத் தொழுகை, தக்பீர், அல்லாஹ்வின் நெருக்கத்தை வேண்டிப் பிராணிகளை அறுத்துப் பலியிடுதல் என்று பல வணக்கங்களின் மாதம் துல் ஹஜ்ஜு. முஹர்ரமோ ஹிஜ்ரீ ஆண்டின் தொடக்கமாக இருப்பதுடன், ஆஷூறா நோன்புகளும் படிப்பினைகளுமாக அமைந்திருக்கின்றது. இந்த இரண்டு மாதங்களுக்கும் வரலாற்றுப்பூர்வச் சிறப்புகளும் படிப்பினைகளும் வணக்கங்களும் நமக்கு வழங்கப்பட்டுள்ளன. அவற்றைச் சுருக்கமாக அறிமுகம் செய்வதே இந்நூலின் நோக்கம்.
ReviewsThere are no reviews yet.