மது உள்ளிட்ட போதைப் பொருட்களின் பிடியிலிருந்து மக்களை விடுவிப்பது என்பது எல்லாச் சமூகங்களுக்கும் முன்னால் இருக்கிற மாபெரும் பிரச்சினையாகும். தனிமனித நடத்தை, ஆரோக்கியமான குடும்ப வாழ்வு, ஆக்கபூர்வமான சமூக வாழ்க்கை என எல்லாவற்றையும் பாதிக்கிற தலையாய விவகாரமாகவும் அது இருக்கிறது. இதனைத் தீர்ப்பதற்கு சட்ட ரீதியான தடைகள் முதல் உளவியல் சிகிச்சைகள் வரை பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், அவை அனைத்தும் முற்றிலும் அல்லது பெருமளவில் தோல்வியில் முடிவதைக் கண்டு நிபுணர்கள் திகைத்துப் போயுள்ளனர். இந்நிலையில், இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான […]